பட்டா பிரச்சனை.அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேணுகாதேவி என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதியன்று பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார்.
சட்டப்படி நோட்டீஸ் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை அவரது நிலப்பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் அவர் மண்டலயிடத்து துணை தாசில்தாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது செல்போன் உடைந்தது. அங்கு நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பொதுவாக சொத்து விவகாரங்கள், நிலம் விவகாரங்கள், பட்டா விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்ற உத்தரவுப்படி தான் விற்க முடியும். பட்டாவின் உரிமையை மாற்ற முடியும். அல்லது பட்டாவில் சிலரது பெயரையும் சேர்க்கவும் முடியும்.
இதில் பல்வேறு வகையான சட்ட சிக்கல்கள் பொதுவாகவே இருக்கின்றன. இதனால் தாசில்தார், விஏஓ, சர்வேயர், துணை தாசில்தார், ஆர்ஐ எனயாருமே நீதிமன்ற விவகாரத்தில் சிக்கல் இருந்தால், தலையிட மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின் படியே செயல்படுவார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் அரியலூரில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான சர்வே எண் 433/11 சார்ந்த நிலத்தில் 50 ஆண்டுகளாக உரிமையுடன் வைத்திருக்கிறோம்.
இதில் நிலத்திற்கு உரிய பட்டா எண் எங்களது பெயரில் நீண்ட காலமாக உள்ளது இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் சட்டப்படி நோட்டீஸும் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டோம் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்போது நான் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் ரேணுகா தேவியின் செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது.
இதில் 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து ரேணுகாதேவி புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது.