BREAKING NEWS

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக முழுவதும் 22 மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் வீரமணி மாவட்ட விவசாய லஞ்ச ஒழிப்பு பிரிவு செயலாளர் கங்காதரன் முன்னிலையில்,

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தேங்காய் கடலை எண்ணெய் எள் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையில் வருமானமின்றி இருக்கின்றனர்.

தமிழக அரசு இந்தோனேஷியா மலேசியா இருந்து ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயில் ரூபாய் 100க்கு இறக்குமதி செய்து 75 ஐ ரூபாய் ஒரு லிட்டருக்கு பாமாயிலுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மானியம் கொடுத்து 25 ரூபாய்க்கு நியாய விலை கடைகள் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் தேங்காய் கடலை உள்ளிட்ட எண்ணெய் வகைகள் ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS