பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் வெங்கடேசன் ஆகியோர் பனமடங்கி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் விநியோகிக்கப்படும் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தி வந்தவர் குடியாத்தம் அடுத்த மீனூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பதும் அவர் ஆந்திராவில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றதும் தெரிய வந்தது இதையடுத்து கடத்திச் சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்து நந்தகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.