பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர்,
கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை மாவட்டத்தில் பார்வையிட்டு நிவாரண வழங்கப்படும் என அறிவித்தனர்.
ஆனால் முதல்வர் பார்வையிட்ட பகுதிக்கு கூட நிவாரணம் வழங்கப்படவில்லை மற்ற மாவட்டங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டத்திற்கு வெறும் 36 லட்சம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை மறித்து சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன். தங்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கவில்லை என்றால் சென்னை சென்று தற்கொலை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.