BREAKING NEWS

பரமக்குடி அருகே இடி தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு.

பரமக்குடி அருகே இடி தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு.

பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் மேக மூட்டத்ருடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென ழ இடியிடன் கன மழை பெய்தது வருகிறது. இதில் இடி தாக்கியதல் இரண்டு சிறுமி உயிரிழப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடி அடுத்த

அரியகுடி புத்தூர் பகுதியில் அஸ்திதா, சபிதா பானு ஆகிய இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்துள்ளனர்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் இவர்கள் இருவரும் சகோதரிகள் இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் ஊருக்கு வெளியில் வேப்பமுத்து பொறுக்குவதற்காக தாயாருடன் சென்றுள்ளனர்

அப்பொழுது திடீரென இடி தாக்கியதில் சகோதரிகள் அஸ்திதா, சபிதா பானு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இருவரது உடலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

உயிரிழந்த சகோதரிகளின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this…

CATEGORIES
TAGS