பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் பால் குடங்கள் எடுத்தும் ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தி பரவசம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனித் திருவிழா மார்ச் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிராமயது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வெகுவிமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து தலையில் சுமந்தபடியே நகரின் முக்கிய வீதிகளில் வளம் வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.