பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட மையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.
அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நில அளவை கள அலுவலர்களின் பல்வேறுபட்ட பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து இன்று மாலை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் நில அளவர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நவீன நில அளவைத் திட்டப் பணிகளில், ஆய்வாளர் தலைமையில் ஊதியப் பட்டியல் வழங்கும் அதிகாரத்துடன் கூடிய தனி அலுவலகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
CATEGORIES செங்கல்பட்டு
TAGS செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்புதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்