BREAKING NEWS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்

பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த நிலம், சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரசே இலவச வீட்டுமனை மற்றும் வீடு கட்டி வழங்க வேண்டும்.

உள்நாட்டு கிராமங்களில் வறுமையில் வாழும் மீனவர்களின் பிள்ளைகளுக்கு தேவையான கல்விக்கடன் எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்க வேண்டும்.

உள்நாட்டு பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான அணை மற்றும் குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை உள்நாட்டு பகுதிகளில் வாழும் மீனவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்நாட்டு கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ள மீன் சந்தைகளில் குத்தகை பிடிக்கும் உரிமையை மீனவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

உள்ளீட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

இவ்ஆர்ப்பாட்டத்திற்கு யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் தலைமை தாங்கினார். கருங்கல் கிளை நிர்வாகிகள் சந்தோஷ்குமார், சிபு, ஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலோர மக்கள் சங்க தலைவர் ஜாண் போஸ்கோ துவக்கி வைத்து பேசினார். கடலோர மக்கள் வளர்ச்சி மன்ற நிர்வாகி நெல்சன், ராயப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

போராட்டத்தில் தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் தலைவர் பீட்டர்தாஸ், மாவட்ட நிர்வாகிகள் மங்களமேரி, ஜெயசீலி சந்திரகலா, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் ஆன்றனி, லிஜின் மற்றும்தமிழ்வாம் சுரேஷ், பாபு, எழிலரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS