பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பதற்கு சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் இவற்றில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சுத்துக்களாக உள்ளது இவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர் ஏற்கனவே காத்திருக்கும் அடிமனை பயனாளிகள் குடியிருப்போர் உடனடியாக தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அடிமை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.