பள்ளப்பட்டியில் பண்ணை தலைவர் மீது புகார் அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே சாண்டலார்புரம் அரிஜன பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தலைவர் மீது முறைகேடு, தன்னிச்சையாக செயல்படுதல்,முகவர்களையும் பொதுமக்களையும் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொடர் புகார்கள் அளித்ததையடுத்து உடனடி விசாரணையில் இறங்கிய மாவட்ட பால்வள துணைப்பதிவாளர் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பால்வளமாவட்ட முதுநிலை ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் சாண்டலார்புரத்திற்கு நேரில் சென்று பால் உற்பத்தி முகவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடி விசாரணை செய்தனர்.
அப்போது சங்க நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறியதை அடுத்து எழுத்துப்பூர்வமான புகார்களாக வாங்கிய அதிகாரிகள் மாவட்ட பால்வள அதிகாரியின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.மேலும் இந்த விசாரணை முன் ஊர் தலைவர் அருள், ஊர்நாட்டாமை ராபர்ட், ஊர்சேர்வை ஜேக்கப், கருப்பையா, செபாஸ்டின் உட்பட 50க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் கலந்து கொண்டனர்
