பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா. சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு..

சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்த நடிகர் தாமு தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்..
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் தேர்வை கொண்டாடுவோம், விழிப்புணர்வு முகாமில் நகைச்சுவை நடிகர் தாமு பங்கேற்று பள்ளி மாணவிகளிடையே தேர்வை கொண்டாடுவோம் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் நடத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தர் துணைத் தலைவர் பாண்டியன் பொருளாளர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திமுக நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் தலைவர் செல்வம் பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பள்ளி மாணவிகளிடையே சிறப்புரை ஆற்ற பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா குமரன் மற்றும் துணைத்தலைவர் வசீம் அக்ரம் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.
அப்போது பேசிய நகைச்சுவை நடிகர் தாமு பள்ளி படிப்பின் போது மாணவிகள் தங்களின் கவனத்தை சிதற விடாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியும் பெற்றோர் குழந்தைகளை பெற்று வளர்ப்பதற்கு படும் கஷ்டங்கள் குறித்து மாணவிகளிடத்தில் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நடனம் நாடகம் நாட்டியம் பாடல் என அரசு பள்ளி மாணவிகள் பல்வேறு துறையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் கலை நிகழ்ச்சிகளை காண பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கான திரண்டதால் பள்ளி வளாகம் திருவிழாக்கள் போல காட்சி அளித்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்திருந்தனர்.