பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது உற்சவர் உத்திர ரங்கநாதர் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வார் காட்சியளித்தார் மேலும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் பள்ளிகொண்டா உத்திரரங்கநாதர் ஆலயமும் ஒன்றாகும் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமையானது 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
மேலும், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதன் இரு அரக்கர்களுக்கு மோட்சமளிக்க மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும்,
அப்போது பெருமாளிடத்தல் அசுரர்கள் இந்நாளன்று இந்த வாசல் வழியே பெருமால் வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தங்களுக்கு கிடைத்தது போலா மோட்சம் கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.
இப்பெருமை வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக நேற்று மாலை 6 மணிக்கு மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.
மேலும் திருக்கோயில் கண்ணாடி மாளிகை அருகே கருட வாகனத்தில் உத்திர ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இதனையடுத்து கண்ணாடி மாலையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட உத்திர ரங்கநாத பெருமாள் திருக்கோவிலை வலமாக வந்து சொர்க்கவாசல் அருகே எழுந்தருளினார்.
தொடர்ந்து வேத விண்ணப்ப பாராயணங்கள் வாசிக்கப்பட்டது பின்னர் உத்திர ரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக நம்மாழ்வார்க்கு காட்சியளித்தார். அப்போது சுவாமிக்கு மஹா தீப ஆராதனைகள் காட்டப்பட்டது.
பின்னர் 6 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கருடவாகனத்தில் உற்சவர் ரங்கநாதர் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை 7 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்காக விடப்பட்டது.
மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக திருக்கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் சுரேஷ் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு, மணியம் ஹரிகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மேலும் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா ஏ டி எஸ் பி பாஸ்கரன் டிஎஸ்பி திருநாவுக்கரசு பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000க்கனக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்பிரிவு சிறப்பு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உதவி ஆய்வாளர் ராஜகுமாரி ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.