பள்ளிகொண்டா பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் பீதி!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா-ஐதர்புரம் பாலாற்றை கடக்க கருங்கல்லாலான தரை ரோடு மட்டுமே இருந்தது.
வெள்ளம் வந்தால் பாலத்தை கடந்து அப்பக்கமும், இப்பக்கமும் போவது மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. 1996-2001 தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் பெருமுயற்சியால் 25 பில்லர்களுடன் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

அதுமுதல் இதுவரை இப்பாலத்தின் பராமரிப்பை பொதுப்பணித் துறை (நீல்வது) எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
ஆனால் பில்லர் கீழே வெள்ளத்தில் அரிக்கப்பட்டு பலம் இழந்து கம்பி தெரிந்து மிக மிக அபாயகரமாக உள்ளது.

மேலும் பாலத்தின் கீழ் ஆலமரங்கள், அரச மரங்கள் முளைத்து பாலத்தை பலவீனமாகி உள்ளது.

இதுகுறித்து கடந்த 2023-ம் ஆண்டு போட்டோ மற்றும் வீடியோவுடன் கூறியும் சம்மந்தப்பட்டவர்கள் அக்கறை காட்டவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் அவ்வப்போது இந்த வழியில் வரும் போது, இது சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர் ஏ பி நந்தகுமார் அவர்களிடம் பல முறை தெரியப்படுத்தியும் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்க் கொள்ளவில்லை எனவும் அப்பகுதியில் கூறப்படுகிறது.
இவ்வழியே ( பாலத்தின் )ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருவது வாடிக்கை. பாலத்தின் பில்லர் கம்பி தெரிகின்ற வகையில் பலவீனமாகி உள்ளது அபாயகரமானதாக தெரிகிறது.

வரும் மழைகாலத்திற்குள் சம்மந்தப்பட்டவர்கள் பாலத்தின் உறுதியை ஆய்வு செய்து கம்பி தெரியும் பில்லர்களை சரி செய்து பாலத்தின் கீழ் முளைத்து இருக்கும் ஆல, அரச மரங்களை அப்புறப்படுத்துவும்,

பாலத்தின் ஒழுங்கான விளக்குகள் அமைக்கவும் இப்பகுதி பொது மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
