பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் பற்றிய விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம்(பெண் குழந்தைகள் காப்பகம்), ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் காரணமின்றி தற்கொலை செய்துக்கொள்வதால் சமூகத்திலும் மற்றும் பெற்றோர்களுக்கும் மிகவும் வேதனையை எற்படுத்துகிறது.
இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி மற்றும் இதனால் உடல்ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகள் என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேஜஸ்வி மங்கையர் மங்கலம் பெண் குழந்தைகள் காப்பகத்தின் President திருமதி பிரேமா குமாரசாமி, Teacher திருமதி சண்முகவள்ளி மற்றும் treasurer ராணி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருமதி ஆர்.கே.வித்யா, சிறப்பு கல்வியாளர் (புரோ-விஷன் குழந்தைகள் எலும்பியல் மற்றும் மறுவாழ்வு மையம், மைலாடி). இதை தொகுத்து வழங்கியவர் எ.எம்.எல் நரம்பியல் மனநல மருத்துவமனை, பால்பண்ணை மற்றும் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி சி. ஆர்த்தி.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் காப்பகத்தின் குழுவினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள். இந்நிகழ்ச்சியில் 27-க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
