பழனியில் காணொளி காட்சி மூலம் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி மற்றும் பண்பாட்டுக் கல்லூரி என நான்கு பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்.
மேலும் அவருடன் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். இன்று துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பயனடைகின்றனர்.
மேலும் இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் ,திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி திருக்கோயில் தேவஸ்தான அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு உணவுகளை பரிமாறினர்.
முன்னதாக இந்த கட்டணமில்லா காலை சிற்றுண்டி திட்டமானது பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரி,பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி- சின்ன கலையம்பத்தூர், பழனி ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி -ஒட்டன்சத்திரம், என நான்கு இடங்களில் ஒரே நேரத்தில், காணொளி மூலம் கட்டனமில்லா காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.