பழனி நகராட்சியில் ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி சார்பாக
தமிழக திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாய மாநில அளவிலான குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஜோதிமணி வருகை தந்து பழனி நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குப்பைகள் சேகரிக்கப்படும் முறை, பிரிக்கப்படும் முறை, அரைக்கப்படுவது மற்றும் உரங்களாக மாற்றப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் நீதி அரசர் குப்பைகள் பிரிக்கப்படும் விதங்கள் பற்றியும் நகராட்சி சார்பில் செய்யக்கூடிய செயல்கள் பற்றியும் விரிவாகும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்.
மேலும் பழனி நகராட்சி சிறப்பாக செயல்படுவதாகவும் தொடர்ந்து சிறு பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகதிடம் கூறி சரி செய்வதாகவும் விரைவில் தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி நகராட்சி ஆணையர் கமலா பொறியாளர் வெற்றிச்செல்வி நகர் நல அலுவலர் மனோஜ் குமார் உள்ளிட்டோர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
