பவானியில் உலக கழிப்பறை தினம் அனுசரிப்பு.

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டு அனுசியா மருத்துவமனை பின்புறம் உள்ள பொது கழிவறை கட்டிடத்தில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு மக்கள் கருத்துகள் கேட்பு QR கோடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் கலந்து கொண்டு கியூ ஆர் கோடு மூலம் கழிப்பிடத்தில் உள்ள குறைபாடுகள் கருத்துக்களை பொதுமக்கள் அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் குறைகள் மற்றும் தகவல்கள் 24 மணி நேரத்தில் குறைகளை நிவர்த்தி செய்யபடும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை துப்புரவு அலுவலர் செந்தில்குமார் துப்புரவு ஆய்வாளர் ஜெகதீஸ் மற்றும் 23 வது வார்டு கவுன்சிலர் கவிதா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பவானி நகராட்சிக்கு உட்பட்ட 27 சமுதாய கழிப்பிட கட்டிடம் மற்றும் மூன்று பொது கழிப்பிட கட்டிடம் போன்றவற்றிலும் இதே போல் யூ. ஆர். கோடு மூலம் குறைகளை தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.