பவானியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி.

ஈரோடு மாவட்ட மாற்று திறனுடைய நல சங்கம் பவானி ஒன்றியம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பவானி பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து துவங்கிய இப்ப பேரணியை நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், அதிமுக நகரச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கொடியை சித்தி துவக்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்ற இப் பேரணியானது பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பவானி பெஸ்ட் குழும நிறுவனங்களின் தலைவர் தன சண்முகமணி மற்றும் திமுக கவுன்சிலர் சரவணன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். அதேபோல் பவானி போலீசார் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாற்று திறனடையோர் நலச்சங்க நிர்வாகிகளான துரைராஜ், செந்தில்குமார், ரமேஷ், முரளி, சக்திவேல், விவேகானந்தன், அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல சங்க பவானி ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.