பவானியில் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது. பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானி தொகுதி எம்எல்ஏ கே.சி. கருப்பணன் பந்தயத்தை கொடியை அசைத்து துவக்கி வைத்தார். உள்ளூர் குதிரை 5 மைல் தூரத்திற்கும், புதிய குதிரை 7 மைல் தூரத்திற்கும், சிறிய குதிரை 43 இன்ச் 8 மைல் தூரத்திற்கும், நடுகுதிரை 9 மைல் தூரத்திற்கும், பெரிய குதிரை 10 மைல் தூரத்திற்கும் பாய்ந்து ஓடி சென்றது.

புதிய குதிரை பிரிவில் கோவை தினேஷ் முதல் பரிசு சேலம் சந்திரன் இரண்டாம் பரிசு ராசி ராசிபுரம் பால்ராஜ் மூன்றாம் பரிசு வென்றனர். 43 இன்ச் சிறிய குதிரை ஏ.வி.எம். குரூப்ஸ் ஆத்தூர், கோவை பாலிகிங் முதல் பரிசும், பூட்டி கலைவேந்தன் நம்பி உதயசூரியன் இரண்டாம் பரிசையும் குமாரபாளையம் வெங்கடேஷ் கோபி அண்ணாமலையார் மூன்றாம் பரிசையும் வென்றனர். 45 இன்ச் நடுக்குதிரை போட்டியில் அன்னூர் மூர்த்தி முதல் பரிசையும் ஈரோடு சரவணன் இரண்டாம் பரிசையும் நாகூர் பாய் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.

இறுதியாக பெரிய குதிரை போட்டியில் கோவை மயில்கல் கணேஷ் முதல் பரிசு ரூபாய் 35,000 மற்றும் கேடயம் பெற்றார். இரண்டாம் பரிசாக பேராவூர் அப்பாஸ் ஜூன் 25,000 மற்றும் கேடயம் மூன்றாம் பரிசாக 35 ஆயிரம் மற்றும் கேடயம் சென்னை மொட்டை குதிரை பெற்றது. பரிசு பெற்ற வீரர்களுக்கு பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் நினைவு பரிசு ரொக்க பணம் வழங்கி சிறப்பித்தார்.

ரேக்ளா அசோசியேசன் தலைவர் வெங்கிடு, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், திமுக கவுன்சிலர்களான சுப்பிரமணியம், திலகவதி சரவணன், சந்தோஷ் குமார், விஜய் ஆனந்த், பாரதிராஜா, ரவி அதிமுக கவுன்சிலர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பவானி குமாரபாளையம் நண்பர்கள் செய்திருந்தனர். பவானி டிஎஸ்பி (பொறுப்பு) சேகர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
