BREAKING NEWS

பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.

பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்,

பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பவீஷ் பார்க்கில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி என்னும் புதிய தேசிய கட்சி மற்றும் கட்சி கொடி அறிமுக படுத்தும் விழா நடைபெற்றது.

 

புதிய இந்தியா புதிய மக்கள் கட்சியின் தேசிய தலைவரும், சமூக ஆர்வலருமான ஜே. சுரேஷ் தலைமை வகித்தார்.

அகில இந்திய செய்தி தொடர்பாளர் அருள் பிரகாஷ், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஆர். கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் டி. சிவக்குமார் வரவேற்று பேசினார். 

மாநிலச் செயலாளர் ஏ. அண்ணாமலை நன்றி கூறினார்.

கட்சியின் தேசிய தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

மக்களின் நலம் ஒன்றே எங்கள் முழு மூச்சு ஆட்சி அதிகாரம் எங்களின் இறுதி இலக்கு இந்திய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி ஏற்படுத்திட வலியுறுத்துவோம்.

 

 

தற்போதைய மாநில அரசு செயல்பாடுகள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆனால் சரியான வழிமுறையை அவர்கள் அடையவில்லை இன்னும் முயற்சி செய்ய வேண்டும்.

 

தற்போதைய மாநில அரசு செயல்பாடுகள் சரியான பாதையை தேர்ந்தெடுத்து உள்ளனர். சரியான வழிமுறையை அவர்கள் அடையவில்லை இன்னும் முயற்சி செய்ய வேண்டும்.

 

முதல்வர் போராடிக் கொண்டு இருக்கிறார் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என இலக்கை அவர் அடையவில்லை.

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது தற்போது தங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என கூறினார் அதேபோல் மக்களுக்காக மட்டுமே கட்சியை உருவாக்கியுள்ளோம் எனவும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )