பவானியில் ரத்ததான முகாம் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம்; பவானி அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை அன்று பவானி நகர காவல் துறை, உயிர் ரத்ததான அறக்கட்டளை, பவானி- குமாரபாளையம் ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பவானி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் ஏற்பாடு செய்தனர்.
இந்த ரத்ததான முகாமில் பவானி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் போலீசார் என பலர் தானாக முன்வந்து ரத்தம் தானம் வழங்கினர். இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
பவானி அரசு மருத்துவமனையில் ரத்தம் சேமித்து வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ரத்த தான முகாமில் பவானி டி.எஸ்.பி. இன்ஸ்பெக்டர் மற்றும் போக்குவரத்து போலீசார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.