பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்; பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி துறை, மற்றும் மது விளக்கு ஆம் துறை அமைச்சருமான சு. முத்துசாமி தலைமை வகித்து சிறப்பு உரையாற்றினார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும், மக்களுக்கு விரிவாக சொல்லி வாக்குகளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவர்களின் வாக்குகளை திமுக வுக்கு கொண்டு வர வைப்பதற்கான பணிகளை முழுமையாக செய்ய வேண்டிய பொறுப்பு வாக்குச்சாவடி முகவர்களுக்கு தான் உள்ளது என விளக்கி பேசினார்.
நிகழ்ச்சிக்கு 104, பவானி சட்டமன்ற தொகுதி திமுக பார்வையாளரும், மாநில தீர்மானக் குழு தலைவருமான பார். இளங்கோ, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பவானி சட்டமன்ற தொகுதியின் பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் கே .ஏ. சேகர், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி. துரைராஜ், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், பவானி நகர செயலாளர் ப.சீ. நாகராஜன்,
பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் அறிவானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், முகவர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி கழக செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.