பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பவானி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், மாரிமுத்து ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு