பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பவானி நகர திமுக சார்பில் ஐயப்பா சேவ திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராஜமாணிக்கம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பவானி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் இளங்கோவன் மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்துகொண்டு பகுதியில் உள்ள 27 வார்டு பகுதிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விவரம் குறித்து தகவல் கேட்டிருந்தனர்.
அதேபோல் பூத் கமிட்டியில் நியமிக்கப்படும் நபர்கள் எவ்வாறு பணியாற்றப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகளான தவமணி, கு. செல்வராஜ், சுப்பிரமணி, ஆடிட்டர் முருகேசன், ராஜசேகர், பாரதி, மோகன்ராஜ், விஜய் ஆனந்த் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.