பவானி, மைலம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா.

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள மைலம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப் பள்ளியில் இந்தாண்டு பிளஸ் டூ படித்து வரும் 131 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியை பவுலின் நிர்மலா தலைமை வகித்தார். மயிலம்பாடி ஊராட்சி தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அன்னை ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூடியிருந்த மாணவ, மாணவியர்களிடையே பேசுகையில் அந்தந்த வயதில் எதை படிக்க வேண்டுமோ அதை நீங்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்.
பொறியியல் துறையோ, மருத்துவ துறையோ எதுவாக இருந்தாலும் பல்வேறு வகையில் தற்போது அரசு வேலை வாய்ப்புகள் காத்து இருக்கிறது.
அவற்றிற்கு எல்லாம் சிறந்த முறையில் கல்வியைப் பயின்று நீங்கள் சிறந்து விளங்க வேண்டும்.
தமிழக முதல்வர் தற்போது கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் கேப்டன் துரை, அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணி என்கிற ஈஸ்வரன், ஒலகடம் பேரூர் கழகச் செயலாளர் ராஜா என்கிற மகேந்திர குமார்,
ஒன்றிய கவுன்சிலர் கார்ஜோன் சதீஸ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், இருபால் ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
