BREAKING NEWS

பவானி வரதநல்லூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பவானி வரதநல்லூர் மற்றும் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 ஈரோடு மாவட்டம்: பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பு பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் உலக தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் தண்ணீரை சேமித்து கோடை காலத்தில் பயன்படுத்துவது குறித்தும் கூடியிருந்த பொது மக்களுக்கு விளக்கி பேசப்பட்டது.

 

அதேபோல் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுமதி சுப்பிரமணியம், பஞ்சாயத்து செயல் அலுவலர் அம்பிகா வடிவேல், வேளாண்மை துறை சித்தையன் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

அதேபோல் பவானி அருகிலுள்ள தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செலம்பகவுண்டன் பாளையம் அரசு பள்ளி கட்டிட வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் செல்வம் தலைமையில் துணைத் தலைவர் சுப்ரமணியம் முன்னிலையில் தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

இதில் பவானி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையாளர் மாரிமுத்து, பஞ்சாயத்து செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தண்ணீர் தினத்தின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கிப் பேசப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவின கணக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS