BREAKING NEWS

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.

பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்.

 

மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயின்று வருகின்றனர். இவர்கள் செல்வதற்கு ஏதுவாக காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.

 

இது குறித்து பலமுறை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கு ஏதுவாக காலை, மாலை இருவேளைகளிலும் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் திருவிளையாட்டம் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

தகவல் அறிந்து வந்த பெரம்பூர் போலீசார் மற்றும் பொரையாறு அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஜெயகுமார் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவில் மாணவர்கள் நலன் கருதி உரிய நேரத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மயிலாடுதுறை- காரைக்கால் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )