BREAKING NEWS

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தொண்டர்களுக்கு வழங்கினர்.

 

 

பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில்: இ.பி.எஸ் உருவபடம் எரித்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்- அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துவும். கோவில்பட்டி யில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவ படம் எரிப்பு சம்பவம் பாஜக விற்கே விரும்பதாக சம்பவம் அமைந்துள்ளது.

 

 

இரவில் பாஜக நிர்வாகியை மாவட்ட தலைவர் தற்காலிக பதவி நீக்கம்
மாநில பொது செயலாளர் மீண்டும் சேர்ப்பு. முதன் முதலில் தொடர்பு கொண்டு பேசியது தான் பால கணபதி பக்குவ படாத நபருக்கு எதிர் வினை ஆற்ற வேண்டாம். தற்போது அவரை மீண்டும் பாலகணபதியை கட்சியில் சேர்த்திருப்பது அவரிடம் கோரிக்கை வைத்து எந்த பிரஜோனம் இல்லை.

 

 

இபிஎஸ் உருவப்படம் எரித்த பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் மனு அளித்து உள்ளொம்.. டி.டிவி தினகரகன் எங்களை வட்டார கட்சி என்று சொன்னால் அவர் கட்சி வார்டு கட்சியா.

 

 புரட்சி தலைவர் ,புரட்சி தலைவி அம்மா இடத்திற்கு பிறகு எடப்பாடி வைத்து பார்கிறோம். பொது குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யபட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. முதற்கட்ட பனிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி உள்ளோம்.

 

 

தென் மாவட்டங்களில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வில்லை. பாஜக அதிமுக விரிசல் இல்லை கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. இதுபோன்ற ஒரு போன்ற ஒரு சில இடங்களில் நடைபெறும் சம்பவங்களை பாஜகவினர் கண்டிக்க வேண்டும்.

 

இரவில் நடவடிக்கை இரவுக்குள் ஓர் இரவாக மாற்றம் என்றால் அவர்களவே பாஜகவின் செயல்பாட்டை விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர். புரட்சி தலைவி அம்மா குறித்து அண்ணாமலை பேசி இருப்பது பக்குவபடாத கருத்தாக கூறியுள்ளார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS