BREAKING NEWS

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.

பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம்.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

கரும்பு வெல்லம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பில் சேர்க்ககோரி பாஜக விவசாய அணியினர் சார்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம்.

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று திமுக அரசின் பொங்கல் பட்டியலில் கரும்பு, வெல்லம் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை பொங்கல் தொகுப்பில் சேர்க்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு,வெல்லம்,தேங்காய் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும் என்றும் இல்லையெனில் பாஜக விவசாய அணி சார்பாக தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாஜக விவசாய சங்க மாநில செயலாளர் ஜி.பி ராஜா கூறினார்.

 

Share this…

CATEGORIES
TAGS