பாதுகாப்பு வளையத்தில் திண்டுக்கல் மாநகரம் – போலீசார் தீவிர வாகன சோதனை

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில்
நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் நகரில் M.V.M.கல்லூரி பழனிரோடு லாரிபேட்டை சவேரியார்பாளையம் குமரன் திருநகர் ஷான் தியேட்டர் அருகே முத்தழகுப்பட்டி பேகம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நகருக்குள் உள்ளே நுழையும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை தீவிர சோதனை செய்து உரிய ஆவணங்கள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் அபராதம் விதித்தும் தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
தீவிர வாகன சோதனையில் திண்டுக்கல் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது