BREAKING NEWS

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

பாபநாசத்தில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய தலைவர் சதாசிவம் கோவில் இடத்தில் வசித்து வருவதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சதாசிவத்தின் வீட்டை காலி செய்யுமாறு சேதப்படுத்திய இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய கோரியும் சதாசிவம் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த பரம்பரை அறங்காவலர் லலிதா சந்தானம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரியும்,

சதாசிவம் வசிக்கும் இடம் மற்றும் குடும்பத்தாருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரியும் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையிலும் மாநிலச் செயலாளர் ரபீக் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்ந ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

CATEGORIES
TAGS