BREAKING NEWS

பாபநாசத்தில் பேருந்து நிழற்குடை ஆக்கிரமிப்பு பயணிகள் அவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..?

பாபநாசத்தில் பேருந்து நிழற்குடை ஆக்கிரமிப்பு பயணிகள் அவதி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள கும்பகோணம் வழித்தட பேருந்துகள் நின்று செல்லகூடிய பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் சென்னை உள்பட பல பகுதிகளுக்கு செல்லகூடிய பயணிகள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

 

சமீப காலமாக பயணிகள் நிழற்குடையை அருகில் உள்ள பேக்கரி மற்றும் குளிர்பான கடை உள்பட வனிக நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் நாளுக்கு நாள் சாலையையும், நிழற்குடையையும் ஆக்கிரமிப்பு செய்து கடை ஸ்டால்களை அமைத்து பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

 

மேலும் பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமருவதற்காக உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்து ஸ்டால்கள் அமைத்து குளிர்பானங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பஸ் வருகைக்காக காத்திருக்கும் பயணிகள் வயதானோர், பெண்கள். முதியவர்கள் என பலரும் இருக்கைகளில் அமரமுடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்தை பேரூராட்சி நிர்வாகம் உணர்ந்து பயணிகள் நிழற்குடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ்.மனோகரன் பாபநாசம்.

CATEGORIES
TAGS