பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு. மற்றும் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு முழு கடையடைப்பு மற்றும் பாபநாசம் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் மஹாலில் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் கோவிந்தராஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார் பொருளாளர் ராமராஜன் சங்க வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
சில்லறை வணிகத்தில் டெஸ்ட் பர்ச்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும்,
தஞ்சை- சென்னை வரை முன்பு மெயின் லைனில் விடப்பட்ட அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும், நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம், மைசூர் ரயில்களை பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பாபநாசம் கடை வீதியில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும், வணிக நிறுவனங்களில் திருட்டுப் போன பொருட்களை வழக்கில் காவல்துறையின் மெத்தன போக்கை கைவிட்டு உரிய முறையில் கண்டுபிடித்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறை கேட்டுக் கொள்வது,
தாலுக்கா அலுவலகம் வரை மினி பேருந்து இயக்க வேண்டும், பாபநாசம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்கு தொடர்ந்து அபராதம் விதித்தும், வியாபாரிகளிடம் வாங்கிய பணத்திற்கு ரசீது வழங்காமலும், வியாபாரிகளை தரக்குறைவாக பேசுவதை கைவிட வேண்டும், பெற்ற பணங்களுக்கு உடனடியாக ரசிகை வழங்க வேண்டும்,
சிறு வியாபாரிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் அன்பு செந்தில் சேவியர் சரவணன் வெங்கடேசன் பாலு பாட்ஷா வாசுதேவன் உட்பட சங்க நிர்வாகிகள் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.