பாபநாசம் அருகே அமமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டிடிவி தினகரன் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் அமமுகவின் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில், அமமுக கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிக்கைக்கான அன்பளிப்புகள் வழங்கப்பட்டது இதில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், அமமுகவின்ர்ன் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS அமமுகஅரசியல்ஆன்மிகம்டிடிவி.தினகரன்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சை பாபநாசம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நோன்பு திறக்கும் நிகழ்ச்சிபண்டாரவாடைமுக்கிய செய்திகள்