பாபநாசம் அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர்.
கடந்த 1991 ஆம் வருடத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 25 நபர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த கனமழையின் காரணத்தால் தொகுப்பு வீடுகள் முழுவதும் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் தொகுப்பு வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுவதால் வீட்டில் வசிப்பவர்கள் இரவில் தங்கள் குழந்தைகளோடு வெளியில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த தொகுப்பு வீடுகளை உடனடியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.