பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் சங்கம் 151 நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தமிழக கரும்பு விவசாயிகளிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை பேசுவதாக தெரிவித்த நிலையில் அதுவரைதொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை, உள்பட100 கோடி நிலுவை தொகை வழங்க வலியுறுத்தியும், ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பெற்ற 300 கோடி ரூபாய் கடனை ஆலை நிர்வாகமே செலுத்த வலியுறுத்தியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மிகத் தலைமையில் நடைபெற்றபேச்சுவார்த்தையில்மே 8 ஆம் தேதி முதல்வரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கையை முதல்வரிடம் போவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் .
அதுவரை கரும்பு விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர் காத்திருப்பு போராட்டமாக நடைபெறும் என தமிழக கரும்பு விவசாயின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு தமிழக கரும்பு விவசாயிகளின் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.