பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது.
இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், திரிசூலம், அக்னி கொப்பரை, அரிவாள், எடுத்தும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வலம் வந்து, அருள் பாலித்து கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் நேர்த்தி கடன் செலுத்தினர்.
செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS அரயபுரம் கிராமம்ஆன்மிகம்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாபநாசம்முக்கிய செய்திகள்வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் திருவிழா