BREAKING NEWS

பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.

பாரம்பரிய திருவிழா; 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள்.

போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வரை 20 கிலோ மீட்டர் நடந்தே சென்று காவடியாட்டம் ஆடி நேர்த்தி கடன் செலுத்தும் கிராம மக்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரியம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம் ராஜ கம்பளத்து நாயக்கர் சமுதாய மட்டுமே வசித்து வரும் இந்த கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு காவடி சுமந்து நிறுத்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு சுமார் 35 கிலோ எடையுள்ள அலங்கார காவடியுடன் பலதரப்பட்ட வேதங்கள் அணிந்த ஆண்கள் தேவராட்டம் ஒயிலாட்டம் ஆடியபடி கரட்டுப்பட்டியில் இருந்து மேல சொக்கநாதபுரம் மீனாட்சிபுரம் பத்ரகாளிபுரம் சடையால் பட்டி கிராமங்கள் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே காவடி சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக வீரபாண்டியிலிருந்து நடைபெறும் கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு இதுபோன்று நடந்தே காவடி சுமந்து சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS