பாராளுமன்ற தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 42 குழுக்கள் அமைப்பு

பாராளுமன்ற தேர்தலையொட்டி
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில்
42 குழுக்கள் அமைப்பு
மாவட்ட ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு பறக்கும் படைக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்களில் ஒரு குழுவிற்கு 1 அலுவலர், 1 காவல் உதவி ஆய்வாளர், 1 ஆண் காவலர், 1 பெண் காவலர், 1 ஒளிப்பதிவாளர் என 5 நபர்கள் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுக்களுக்கு 15 நபர்கள் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளில் 18 குழுக்களுக்கு 90 நபர்களும்,
நிலையான கண்காணிப்பு குழுவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு
3 குழுக்களில் ஒரு குழுவிற்கு 1 அலுவலர், 1 காவல் உதவி ஆய்வாளர், 1 ஆண் காவலர், 1 பெண் காவலர், 1 ஒளிப்பதிவாளர் என 5 நபர்கள் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழுக்களுக்கு 15 நபர்கள் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளில் 18 குழுக்களுக்கு 90 நபர்களும், 8 மணி நேரத்திற்கு சுழற்சி அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 குழுவில் 1 அலுவலர், 1 ஒளிப்பதிவாளர் என 2 நபர்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6 குழுக்களில் 12 நபர்கள் என மொத்தம் 42 குழுக்களில் 192 அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.