BREAKING NEWS

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது

2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமுலுக்கு வந்தது

இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமையிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் முன்னிலையில் நடைபெற்றது

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 தேர்தல் நடத்தை நெறி விதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 3 தொகுதிகள் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன

இந்நிலையில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உங்களுக்கு வந்தது

இதனை அடுத்து இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசு கட்சி பிரதிநிதிகள் உடன் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நேரம், கரூர் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர்கள், புகார் தெரிவிக்க ஃப்ரீ டோல் நம்பர், சட்ட ஒழுங்கிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS