BREAKING NEWS

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!

பார்வை குறைபாடு உள்ள 55 வயது முதியவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே படிப்பதை செவிவழிக் கேட்டு குருப் 2 தேர்வில் தேர்ச்சி..!!

பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி 55 வயது முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை செய்து கொண்டே, ஒய்வு எடுக்கும் நேரத்தில் வயதான மூதாட்டி ஒருவரை படிக்க சொல்லி,

 

செவி வழி கேட்டு மனப்பாடம் செய்து குருப் 2 முதல் நிலை (பிரிலிமினரி) தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று பிறர் பார்வையை தன் மேல் பதிய வைத்து உள்ளார். ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலாளி ரவிச்சந்திரன்.

 

 

இவரை பற்றிய செய்தி தொகுப்பு;-

வயதும், ஊனமும் கல்விக்கு தடையில்லை என்பதை நிருபிக்கும் வகையில் சாதித்து காட்டி உள்ளார், தஞ்சை மாவட்டம் ஆழி வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்.

 

55 வயதான இவர் பார்வை திறன் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி. 1990ம் ஆண்டு பி.எஸ்.சி கணிதம் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

 

விவசாய கூலி தொழிலாளியான இவர் நூறு வேலை பார்த்துக் கொண்டே அக்கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

 

 

இந்நிலையில் அரசு வேலையில் சேர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத முடிவு செய்து குருப் 2 தேர்வு எழுத தயாரானார்.

 

கோச்சிங் சென்டரில் சென்று படிக்க வசதி கிடையாது. பார்வை திறன் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி நாம் என்ன செய்வது என யோசித்த வேளையில் உதயமான யோசனைபடி குருப் 2 தேர்வுக்கான புத்தகம் வாங்கினார்.

 

 

நூறு நாள் வேலையில் ஈடுப்பட்டு கொண்டு, கிடைக்கும் ஓய்வு நேரத்தில சக தொழிலாளர் பத்மாவதி என்ற 9ம் வகுப்பு படித்துள்ள மூதாட்டியிடம் புத்தகத்தை கொடுத்து அவரை படிக்க சொல்லி. செவி வழியாக கேட்டு மனப்பாடம் செய்துள்ளார்.

 

 

மிகுந்த நம்பிக்கையுடன் முதல் முறையாக குருப் 2 பிரிலிமினரி தேர்வு எழுதினார். தேர்வு முடிவுக்காக காத்து இருந்த ரவிச்சந்திரனுக்கு இன்ப அதிர்ச்சியாக சமிபத்தில் வெளி வந்த தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

 

தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள மெயின் தேர்வுக்கு தயாராகி வருகிறார் ரவிச்சந்திரன். அவரது முயற்சிக்கு ஒட்டு மொத்த கிராம மக்கள் துணை நிற்கின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )