பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சுகாதார நடவடிக்கை

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சமீபகாலமாக மர்ம காய்ச்சல் பரவி வந்ததை தொடர்ந்து பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜனின் அறிவுரையின் பேரில்,
தோட்டனுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் வழிகாட்டுதலுடன் சுகாதார ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் சுகாதார பணியாளர்களும் துப்புரவு பணியாளர்களும்,
பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் ஐஸ்வர்யா நகர் சிறுமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி ஆவது பற்றியும் கொசுவை ஒழித்து காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களிலிருந்து மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டும் என்று அறிவுரைகளை கூறியதோடு சுகாதாரப் பணிகளையும் மேற்கொண்டனர்.
இவர்களோடு கந்தவேல் மற்றும் ஆரோன் சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர் சிறந்த முறையில் மக்களுக்கு கருத்துக்களை கூறி உடனடியாக நடவடிக்கை எடுத்த சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினருக்கு பகவான் சேஷாத்திரி நகர் பகுதி மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
