BREAKING NEWS

பாலக்கோடு உட்கோட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.

பாலக்கோடு உட்கோட்டத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்த டிஎஸ்பி சிந்து.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் நடைபெற்றது.

இதில் பட்டாசு கடை வைக்கும் இடம் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கடைக்குள் செல்லவும், வெளியேறவும் இரு புறங்களிலும் வழி கட்டாயம் இருக்க வேண்டும். கட்டிடத்தில் மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரிமம் கேட்பவர்கள் தீயணைப்பு, உள்ளாட்சி, காவல் துறையிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் இருக்க வேண்டும்.

பட்டாசு கடைகளில் 2 கே.ஜி. கொள்ளளவு உள்ள 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்க கூடிய தீயணைப்பான் வைக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனே தீயணைப்பு துறை, போலீசுக்கு தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் அமைக்க வேண்டும். கடையில் 500 லிட்டர் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும்.

கடை உரிமையாளர், தொழிலாளர்கள் பாதுகாப்பு பயிற்சி பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.விபத்து ஏற்பட்டால் உடனடியாக அலாரம் அடிக்க ஐ.எஸ்.ஓ., தரச் சான்று கருவி பொருத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின் வயர் சுவிட்சுகளை கடைகளில் பயன்படுத்த வேண்டும்.

பட்டாசுகள் சரவேடி, நாட்டு வெடிகள், பந்து பட்டாசுகள், கண்ணாடி குவாலை பட்டாசுகள் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை வட்டாச்சியர் எழில், மாரண்டஹள்ளி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம், மகளிர் காவல் ஆய்வாளர் வீரம்மாள், உதவி ஆய்வாளர் கோகுல், எழுத்தர் சின்னசாமி, மற்றும் காவல் துறை அதிகாரிகள் பட்டாசு கடை உரிமையாளர் என திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS