பாலமேடு அருகே வனப்பகுதியில் போடப்படாத சாலைகள் – சீரமைப்பு பணிகள் தீவிரம் எம்.எல்.ஏ வெங்கடேசன், வனத்துறை அதிகாரிகள் ஆய்வு.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வனபகுதிகளில் போடப்படாத சாலைகளை தமிழக முதல்வர் உத்தரவால் வன சாலைகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாலமேடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போடப்படாத சாலைகளை சீரமைக்க வேண்டும் என சோழவந்தான் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.
உடனடியாக உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்தநிலையில் 15 ஆண்டுகளாக வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை சீரமைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே சென்னையிலிருந்து வந்த வனத்திட்ட குழு அதிகாரிகள் உடனடியாக வடகடுபட்டி, விராலிபட்டி, சாத்தையார் அணை சாலை, சரந்தாங்கி, முடுவார்பட்டி – சால்வார்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வனபகுதிகளுக்குள் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த குழு ஆய்வறிக்கையை விரைவில் அரசிடம் சமர்பித்தவுடன் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.