பாலமேடு பகுதியில் சந்தன கட்டை கடத்திய 4 பேர் கைது – போலிஷ் விசாரணை.

மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு பாலமேடு ஸ்டேட் பேங்க் முன்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுமார் 2.30 மணியளவில் சந்தேகத்திற்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரை வழிமறித்தனர். போலீசாரை கண்டு அந்த மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீசார் அவர்களை துரத்தி பிடித்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த முருகன்(30), அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவி(36), மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மணி (26) என்பதும் அவர்கள் பாலமேடு அருகே உள்ள மானிக்கம்பட்டி வனப்பகுதியில் சந்தன மரக்கட்டைகளை வெட்டி கடத்த முயன்றதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.
அவர்களிடமிருந்து சந்தன கட்டைகள், கோடாரி, அருவாள், மரம் அறுவை ரம்பம் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பாலமேடு அருகே பாரைப்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.