பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கும் போலீசார் பொதுமக்கள் பாராட்டு.
தர்மபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து பள்ளி குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பள்ளி குழந்தைகளின் முழு ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்தால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும் என்ற நோக்கத்தில் காவல்துறை செயல்படுவதற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் எவ்வாறு தப்பிப்பது, விழிப்புணர்வுடன் எப்படி இருப்பது, குற்ற செயல் நடக்காவண்ணம் முன்னெச்சரிக்கையாக எவ்வாறு செயல்படுவது, காவல்துறை உ தவியை எப்படி கோறுவது,பள்ளிக் குழந்தைகளுடன் எவ்வாறு நல்லுறவு பேணுவது, குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல்துறை தீவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் போரில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய போலீசார் பள்ளிகளுக்குச் சென்று, பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் குற்ற ங்களில் இருந்துஎப்படி தப்பிப்பது, உதவிக்கு காவல் துறையை எவ்வாறு அழைப்பது போன்ற நிகழ்வுகளை அனைத்து காவல் நிலையங்களும், முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொம்மிடியில் உள்ள உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் போலீசார் பி, துரிஞ்சிப்பட்டி அரசு பள்ளியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு குற்ற செயல்களில் கையாளக்கூடிய முதல் தகவல் அறிக்கை வரைமுறைகள் குறித்தும், அவசர உதவிக்கு காவல் துறையை எவ்வாறு அழைப்பது என்பது போன்ற செய்முறை விளக்கங்களையும், பள்ளி மாணவ மாணவியருக்கு செய்முறை விளக்கம் அளித்து பார்வையிடவும், வழிவகை செய்தனர்.
அதேபோல ஏ, பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் அதிகாரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ,பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பள்ளி மாணவ மாணவியரிடம் கலந்துரையாடல் ஈடுபட்டு, அவர்களின் கருத்துக்களையும் .ஆலோசனைகளையும் தனிதனியாக எழுத்துப்பூர்வமாக பெற்று கொண்டனர்.
இதன் மூலம் அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகளையும் ,தாங்கள் அதில் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தும் எழுத்து மூலமாக ஆலோசனை வழங்கினர்.
காவல்துறை எடுத்துள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி காவல்துறைக்கும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு நல்லுறவு இருந்தால் மட்டுமே பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் காவல்துறை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து முனைப்புடன் கடந்த சில வாரங்களாக எடுப்பதை பாராட்டும் பொதுமக்கள் மேலும் அதிக அளவில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.