பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் மாநிலம் நெல்லூர் சந்தையிருந்து வாங்கிவரப்பட்ட கறவை மாடுகளை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கவரைப்பேட்டை போலீசார் விடுவிக்க கோரி பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பால் உற்பத்தியாளர் ராஜா என்பவர், கடந்த ஆண்டு 2022 ஜூலை 13–ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கல் மாட்டுச் சந்தையில் கால்நடை மருத்துவரின் சான்றிதழ்வுடன் ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 கறவை மாடுகளை வாங்கி வந்ததாகவும்,
தமிழக எல்லையான கவரைப்பேட்டை போலீசார் சட்ட விரோதமாக இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதாக தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ததாகவும், ஆனால், கறவை மாடு வாங்கியதற்கான மருத்துவ சான்றிதழ் கொடுத்தும் போலீசார் விடுவிக்காமல் மாட்டை மெய்யூரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்ததாகவும், அதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்த கறவை மாடு சட்டவிரோதமாக இறச்சிக்காக கொண்டு வந்தது கிடையாது என்றும் முறையாக உரிமையாளர் பால் உற்பத்தையாளர் என்பதால் அவரிடம் மாட்டை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் கடந்த மார்ச் 13-ஆம் தேதி அன்று உத்தரவிட்டிருந்ததாகவும்,
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 மாதம் கடந்தும் கோசாலையில் மாடுகளை விடுவிக்க மறுப்பதாகவும் கூறி, மாடுகளின் உரிமையாளர் ராஜா, சக பால் உற்பத்தியாளர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் கேனுடன் வந்து மாட்டை விடுவிக்க கோரி பதாகைகள் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அங்கு வந்த மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அரிகிருஷ்ணன், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் மாடுகளை விடுவிக்க கோரி தொலைபேசியில் பேசி சமாதானம் செய்து வைத்ததால் போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.