BREAKING NEWS

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில்  முதல்வர் பிறந்த தினத்தையொட்டி  மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டியில் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி மாணவர்களுக்கு திமுக சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி திப்பணம்பட்டி ஊராட்சி திமுக சார்பில் வினைதீர்த்தநாடார்பட்டி காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளியில் பயிலும் 150 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றிய பொருளாளர் வினைதீர்த்தான் தலைமை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியை வேல்ராணி , மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் சமுத்திரப்பாண்டி , வார்டு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தாளாளர் ராஜசேகர் வரவேற்றார்.கே.பி தங்கராஜ் தொகுப்புரையாற்றினார்.

மாணவ, மாணவிகளுக்கு தேர்வ எழுதும் அட்டைகள், எழுதுபொருட்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் ஞானசேகர், ராஜேந்திரன், தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி காசிப்பாண்டியன், வெற்றிவேல் நாடார், பவுன் துரை, முத்துராஜ், வேதமுத்து, செல்லத்துரை, சுந்தர், அரசு, ராமசாமி, விஜயகுமார், செல்வன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.பள்ளி ஆசிரியர் கல்பனா நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை சசிகுமார், கபில் தேவதாஸ் மற்றும் முத்துக்குட்டி செய்திருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS