BREAKING NEWS

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

பாஸ்ட்டேக்ல் சுங்ககட்டணத்திற்கான பணம் இல்லாததால் 3மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து – அரசு போக்குவரத்துதுறையின் பரிதாப நிலை.

திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.

 

துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான பாஸ்ட்டேக் அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல், சுங்கச்சாவடிக்கான பாஸ்ட்டேக் கட்டணமில்லாததால் துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.

 

 

இதனால் அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 25க்கும் மேற்பட்டோர் இறக்கி விடப்பட்டு அவ்வழியாக வந்த மற்ற அரசு பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவு கிடைக்காததால் அரசு பேருந்தானது சுங்கச்சாவடி அருகிலேயே சுமார் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

 

 

அதன் பின்னர் அரசு பேருந்து கழகம் கும்பகோணம் கோட்டம் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்தபிறகு நடத்துனர் சுங்க கட்டணத்திற்காண பணத்தை செலுத்தியதுடன், அதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

 

திராவிட மாடல் ஆட்சியில் அரசு பேருந்தின் அவல நிலையை பாருங்கள் என அப்பகுதியில் இருந்தவர்கள் கூறிச் சென்றதை நம்மால் கேட்க முடிந்தது.

 

CATEGORIES
TAGS