பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம்
பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது
திருவள்ளூரில் உள்ள திருப்பாச்சூர், பகுதியில்
அமைச்சர் ஆவடி
சா.மு.நாசர், மாவட்ட செயலாளர்கள்
திருத்தணி எஸ்.சந்திரன்
வல்லூர்
எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்,
ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார்,
அதில் ஒன்றிய அரசு மும்மொழிப் கொள்கையை ஏற்றால் மட்டுமே கல்வி நிதி வழங்கும் என அறிவித்த நிலையில் இதற்கு தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே போதும் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது எனவும்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடியை தராமல் ஒன்றிய அரசு தமிழக மாணவர்களை வஞ்சித்து வருவதாகவும்,
அதேபோல் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,
இதனையடுத்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருவதாகவும்.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து பேசிய அவர்
நம்மைப் பொருத்தவரைக்கும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் -எதிர்க்கட்சியாக இருந்தாலும் – சட்டமன்றம் –
நாடாளுமன்றம் -மக்கள் மன்றம் என்று, என்றைக்கும் மக்களுக்கான குரலாக ஒலிப்போம். வாதாடியும் போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம் என்பதற்கான உறுதியேற்றுக் கொள்ளும் கூட்டம்தான், இந்த மாபெரும் பொதுக்கூட்டம்!
என்றும்
பிரதமர் நரேந்திர மோடி,
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்” என்று சொன்னதை மறந்து செயல்பட்டு வருவதாகவும்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து -ஒழித்துவிடும் என்றுதான் நாம் இந்த மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம் என்றும் மூன்று, ஐந்து, எட்டு ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை வைத்து வடிக்கட்டப் பார்க்கிறார்கள்
எனவும்
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டு வரப் போகிறார்கள்! அதில் ஆல் இந்தியா எக்ஸாம் போன்று நடக்கப் போவதாகவும்
மாணவ மாணவிகள்
மகனோ, 12-ஆம் வகுப்பு முடித்துட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வு வைப்பது போன்று, கலைக் கல்லூரிக்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள்! அந்தத் தேர்வையும், கல்லூரிகள் நடத்தாது; தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தப்படும்,
10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள், அவர்களாகவே வெளியேறலாம் எனவும்
ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்! என்றும் குலத் தொழிலை, ஜாதித் தொழிலைத் தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்ப்பதாகவும் இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று
ஆணித்தரமாக சொல்வதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்தார்.
இதில்
சட்டமன்ற உறுப்பினர்
திருவள்ளூர்
வி.ஜி.ராஜேந்திரன்,
பூந்தமல்லி
ஆ.கிருஷ்ணசாமி,
கும்மிடிப்பூண்டி
டி.ஜே.கோவிந்தராஜன்
உட்பட கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.